ஒரு இஸ்லாமிய நாடே 5 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை! ட்ரம்பை தொடர்ந்து குவைத்

kuwaitஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஓமான் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தபட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்த விடயம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வருகின்ற நிலையில் குவைத் நாடானது பாக்கிஸ்தான் உட்பட 5 இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

அந்தவகையில் சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கு குவைத் தடை விதித்துள்ளது.

அத்துடன் தடை செய்யப்பட்ட குறித்த நாடுகளில் இருந்து அடைக்கலம் கோரி யாரும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் அகதிகள் போர்வையில் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் இந்நடவடிக்கை குவைத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com