பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொலிஸாருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி பாரிஸ் நகருக்கு அருகில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸா் கைது செய்தனர்.
22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை அந்நாட்டு பொலிஸார் சித்திரவதை செய்துள்ள அதேவேளை, துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருக்கின்றது.
எனினும், பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து, வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 10 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில், பொலிஸாருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவத்து அந்நாட்டு பொலிஸார் இதுவரையில் 12 பேரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-http://www.tamilwin.com