பட்டினியில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள்: பல மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான தென் சூடானில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

தென் சூடானின் நிலையை அறிந்து உதவ பிரித்தானிய அரசு தற்போது முன்வந்துள்ளது.

அதே போல பட்டினியால் வாடும் நைஜீரியா மக்களுக்கு உதவ ஜேர்மனி மற்றும் நார்வே நாடுகள் முடிவெடுத்துள்ளது.

இன்னொரு நாடான ஏமனில் இரண்டு வருட தொடர்ச்சியான உள்நாட்டுப் போரினால் சுமார் 10,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், போரின் விளைவாக மக்கள் கடும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஏமனிலுள்ள 7.3 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

-http://news.lankasri.com