கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது.
கனடாவில் Ontario உட்பட சில மாகாணங்களில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருகிறது.
Ontarioவில் மட்டும் 2017ல் இது வரை 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று நோயான இது எச்சில், ஒருவரின் சுவாச மூச்சின் மூலமாக மற்றவர்களுக்கு அதிகம் பரவுகிறது.
இந்த வருடம் இந்த நோய் தாக்கியவர்கள் எல்லோரும் 18லிருந்து 35 வரை உள்ள இளைஞர்களாகவே இருக்கிறார்கள் என்பது முக்கிய விடயமாகும்.
காய்ச்சல், உடல் சோர்வு, உணவு உட்கொள்ளுதலில் சிரமம் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
தட்டம்மை நோய் பெரியளவில் பாதித்தால் மலட்டுதன்மை பிரச்சனை கூட ஏற்ப்படும்.
இதற்கான தடுப்பூசிகளை சரியாக போட்டு வந்தால் இதிலிருந்து விடுபடலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-http://news.lankasri.com