சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்காற்றை போத்தலில் அடைத்து நபர் ஒருவர் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பேசல் மாகாணத்தில் குடியிருந்து வரும் பிரித்தானியர் ஒருவர் இந்த புதுவகையான வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார்.
ஆல்ப்ஸ் மலைக்காற்றினை போதல்களில் அடைத்து விற்பனைக்கு வைத்திருக்கும் இவர், அதில் கிடைக்கும் வருவாயின் ஒருபகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
தற்போது அரை லிற்றர் முதல் 3 லிற்றர் போத்தல்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த மலைக்காற்று உரிய ஆவணங்களும் இணைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலையின் மிகவும் பிரத்யேகமான பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சுத்தமான காற்று என அந்த நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஸ் போன்று உறைய வைக்கப்பட்ட போத்தல்களில் இருந்து வாடிக்கையாளர்கள் மிகவும் சுத்தமான ஆல்ப்ஸ் மலைக்காற்றை சுவாசித்து உணர முடியும் என அந்த நிறுவனம் உறுதி அளிக்கின்றது.
சுவிட்சர்லாந்தின் Zermatt பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட காற்றினை மிகவும் பாதுகாப்புடன் போத்தல்களில் அடைக்கப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயருடன் கூடிய ஆவணமும் இணைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக நிறுவனத்தின் உரிமையாளர் கிரீன் தெரிவித்துள்ளார்.
அரை லிற்றர் ஆல்ப்ஸ் காற்றின் விலை 97 டொலர் (இலங்கை மதிப்பில் RM431). ஒரு லிற்றர் விலை 167 டொலர் எனவும் 3 லிற்றர் போத்தலின் விலை 247 டொலர் எனவும், இது அனைத்துவகை கட்டணமும் உள்ளடகிய விலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் பேசல் பகுதியில் குடியிருந்து வரும் ஜான் கிரீன், இந்த காற்று வணிகத்தை மக்களுக்கான் தொண்டாக கருதி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com