அண்ணனை கொலை செய்த வடகொரிய அதிபர்? வெளியான அதிர்ச்சி தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் தான் அவருடைய அண்ணனை கொலை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம், கடந்த 13 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இது தொடர்பாக இந்தோனிஷியா மற்றும் வியட்நாம்மைச் சேர்ந்த இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது அண்ணனை கொலை செய்வதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் தான் உத்தரவிட்டார் என்று தென்கொரிய உளவு நிறுவனம் அதிரடி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய எம்பிக்கள் கூறும்போது, வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் கிம் ஜாங்-நம்-ஐ கொலை செய்ய 2 பெண்களை பணியில் அமர்த்தியதாக கூறியுள்ளனர்.

மேலும் தனது அண்ணனை கொலை செய்ய வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் உத்தரவிட்டார் என்று தென்கொரிய எம்பி கிம்பயுங்-கீ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்காக அதிபர் மூன்று குழுக்களை உருவாக்கியதாகவும், அதில் இரண்டு குழுக்கு அவரை கொலை செய்வதற்கு, ஒரு குழு அவர்களுக்கு உதவி செய்வதற்கு நியமனம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு வடகொரிய அரசு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது.

-http://news.lankasri.com