கடும் எதிர்ப்பு எதிரொலி: பிரித்தானியா வருகையை ரத்து செய்த டிரம்ப்?

Donald Trumpபிரித்தானிய மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது பிரித்தானிய விஜயத்தை வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அரசு முறை பயணமாக வரும் யூன் மாதம் பிரித்தானியா வருவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதை பிரித்தானிய பிரதமர் தெரசா மே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். மட்டுமின்றி மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தலைமையில் விருந்து உபசரிப்புகளும் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் டிர்ம்பின் பிரித்தானிய வருகைக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. டிம்பின் வருகையை ரத்து செய்ய வலியுறுத்தி பிரித்தானியாவின் பல பகுதிகளில் பிரமாண்ட பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோபம் தணியும் மட்டும் தமது வருகையை சில மாதங்கள் ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளாராம் ஜனாதிபதி டிரம்ப்.

அதன்படி வரும் அக்டோபர் மாதம் ஜனாதிபதி டிரம்ப் பிரித்தானியா வருகைதர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த தகவலுக்கு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 1.8 மில்லியன் பொதுமக்கள் கை ஒப்பம் இட்டுள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதமும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com