அமெரிக்க நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களை விசாரணை செய்யும்போது அவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்ற சட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன.
குறிப்பாக, மிச்சிகன் மாகாணத்தில் ஒரு வினோதமான, பெண்களுக்கு எதிரான சட்டம் அமலில் இருப்பது தற்போது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது, இந்த மாகாணத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகளிடம் விசாரணை செய்யும்போது அவர்களுடன் பொலிசார் உடலுறவுக் கொண்டால் அது சட்டத்திற்கு எதிரானது அல்லது என்பது தான் தற்போதை கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதே மாகாணத்தில் ஆட்கடத்தல்களை(Human Trafficking) தடுக்கும் அமைப்பின் இயக்குனரான Bridgette Carr என்ற பெண்மணி இந்த சட்டத்தை நீக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.
இது குறித்து அவர் பேசியபோது, ‘ஆட்கடத்தலில் சிக்கிய பெண்களை சில பொலிஸ் அதிகாரிகள் பாலியல் தொழிலாளிகளாக கருதி அவர்களுடன் உடலுறவுக் கொள்கின்றனர்.
பொலிசார் என்பதாலும் அவர்களிடம் அதிகாரம் உள்ளது என்பதாலும் பல பெண்கள் இச்சட்டத்தால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாலியல் தொழிலாளிகள் என்பவர்கள் யார் என்பதை அது தொடர்பான சட்டங்கள் சரியாக எழுதப்படாததும் இக்குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.
அதே சமயம், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட விசாரணையின்போது அவர்களிடம் பொலிசார் உடலுறவுக்கொள்ள சட்டமே அனுமதிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது.
இச்சட்டத்தை பொதுமக்களின் ஆதரவுடன் விரைவில் தடை செய்வேன் என Bridgette Carr உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com