கனடாவை உலுக்கிய செவிலியரின் கொடூர செயல்

கனடாவில் எட்டு பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த செவிலியர் மீது நீதிமன்றம் பல்வேறு குற்றபிரிவுகளில் தண்டனை வழங்கவுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் Elizabeth Wettlaufer (49).

இவர் 2007 – 2014 காலகட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளான ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட Elizabeth சில முறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. தற்போது மீண்டும் சிறையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் மீது மேலும் 4 வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள Elizabethக்கு முக்கிய தண்டனைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த ஜூன் 2007லிருந்து ஆகஸ்ட் 2016 வரை அவர் பராமரித்து வந்த நோயாளிகளை கொடுமைப்படுத்தியதாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com