அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வெற்றி முன்பாக, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதை கண்டுபிடித்துள்ளேன்.
அவர் ஜனாதிபதியாக இருந்துகொண்டு இப்படி ஒட்டு கேட்டது சட்டப்படி நியாயமா? என்று குற்றம்சாட்டி உள்ளார். மேலும், ஒரு நல்ல வழக்கறிஞர் இதை ஒரு பெரிய வழக்காக பதிவு செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், டிரம்ப் தனது குற்றசாட்டு தொடர்பாக எவ்வித ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com