தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப்! ஈரான் நாட்டவர் குடியேறலாம்

donald-trumpஅமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் நாட்டிற்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற சட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

யெமன், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடுத்த 90 நாட்களுக்கு யாரும் குடியேற முடியாது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தகுந்த விசா அனுமதியோடு குடியிருப்பவர்கள் மற்றும் க்ரீன் கார்டு ஹோல்டர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த புது உத்தரவு மார்ச் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜனவரியிலும் இது போன்ற ஒரு உத்தரவை, கால அவகாசம் தராமல் உடனடியாக ட்ரம்ப் அமல்படுத்தியது பலவித குழப்பங்களை ஏற்படுத்தியதோடு, கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது.

அதிலிருந்து சில மாற்றங்களை செய்து இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com