ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது வழக்கறிஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ள யாஸிதி இனத்தை சேர்ந்த Dalal(20) என்ற இளம்பெண் தான் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தபோது ஐ.எஸ் தீவிரவாதிகளால் இப்பெண் கடத்தப்பட்டார்.
பின்னர் 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாகவே அவரை தீவிரவாதிகள் நடத்தி வந்துள்ளனர். இந்த 3 ஆண்டுகளில் இளம்பெண் 9 தீவிரவாதிகளால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.
எனினும், கடுமையான போராட்டங்களை எதிர்க்கொண்டு அப்பெண் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
சிறுவயது முதல் பெண்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட அவர் ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ளார்.
தற்போது ஜேர்மனியில் உள்ள Baden-Wurttemberg நகரில் வசித்து வரும் அவருக்கு அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புகள் உதவி வருகின்றன.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து அவர்களின் பாதுகாப்பிற்காக விரைவில் வழக்கறிஞராக பணியில் அமர்வேன் என Dalal நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com