உலகமே வியக்கும் மாயன் நாகரீகத்தின் நம்ப முடியாத உண்மைகள்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால் மத்திய அமெரிக்க நகாரிகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர்.

மாயன் நாகரிகம் குறைந்துவிட்டாலும், தற்போதும் கூட மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளின் கிராமப்புற பகுகளில் இருப்பதாக அறியப்படுகிறது.

எண் 0 பயன்படுத்திய முதல் நாகரிகம் மாயன் நாகரிகம். பின்னரே, இந்திய கணிதவியலாளர்கள் அதற்கு ஒரு கணித மதிப்பு அளித்து பயன்படுத்தி முதல் நபராக ஆனார்கள்.

அஸ்டெக் போல் மாயன் இனத்தவர்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நீதிமன்றங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில், துண்டிக்கப்பட்ட தலைகளை மாயன் இனத்தவர்கள் பந்துகள் போல் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்டு வருகின்றது. உலமா என்ற பெயரில் தற்போதும் குறித்த விளையாட்டு நவீன முறையில் விளையாடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரமிடுகள் நிறைந்த மாயன் நகரங்களில் ஒன்றை தனியார் உரிமையாளரிடமிருந்து அரசு வாங்கியது.

கைதிகள், அடிமைகள், மற்றும் குற்றவாளிகள் நீலம் அல்லது சில குறிப்பிட்ட நிறத்தால் பூசப்பட்டு பிரமிடுகள் ஒன்றின் மேல் கொண்டு சென்று அங்கு அவர்கள் அம்புகளால் சரமாரியாக சுடப்படுவார்கள்.

ஹாப் காலண்டர் நவீன கிரிகோரியன் காலண்டர் போன்ற 365 நாள் சுழற்சியில் உள்ளது. 2.880.000 நாட்கள் கொண்ட காலண்டரே 2012ல் உலகம் முடிவடையும் என கணித்தது.

துரதிருஷ்டவசமாக மாயன் எழுத்துக்கள் பல ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு போது அழிந்தது. எனினும், 20ம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் அவர்கள் மீதமுள்ள எழுத்துக்களில் மீண்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மாயன் இனத்தவர்கள் எஃகு அல்லது இரும்பை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. . தங்கள் ஆயுதங்களை obsidian அல்லது எரிமலை பாறைகளால் மட்டுமே செய்வார்கள்.

குழந்தையின் கண் ஓரக்கண் ஆக மாறும் வரை குழந்தையின் கண்கள் முன் ஒரு பொருளை தொங்கவிடடு ஆட்டுவார்கள். குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாள் படியே பெயர் சூட்டுவார்கள். மாயன் இன பெண்கள் பற்களை புள்ளிகளால் அலங்கரித்துக் கொள்வார்கள்.

யுகாடான் தீபகற்பத்தை சுற்றி 70 லட்சம் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஷார்க் என்ற வார்த்தை முதலில் ஒரு மாயன் வார்த்தை என சில மொழியலாளர்கள் நம்புகின்றனர்.

கொலம்பிய மாயன் இனத்தவர் தங்கள் குழந்தைகளின் உடலியல் அம்சங்களை விரவுபடுத்த, தாய்மார்கள் குழந்தைகளின் நெற்றிகளில் பலகைகளை வைத்து அழுத்தி தட்டையாக மாற்றுவார்கள்.

மாயன்களின் மருந்து உண்மையில் மிகவும் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் மனித முடி, நிரப்பப்பட்ட பற்கள் பயன்படுத்தி காயங்கள் தையல் இடப்படுகிறது. இயற்கையான சூழலில் இருந்து எடுக்கப்பட்ட வலி நிவாரணிகளை பயன்படுத்துவார்கள்.

சில மாயன் இனத்தவர் தற்போதும் கோழி இரத்தத்தை தியாகம் செய்வதை கடைப்பிடித்து வருகின்றனர்.

சானாஸ் மற்றும் வியர்வை குளியல் மாயன் கலாச்சாரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்தது. சானாஸ் அசுத்தங்கள் விடுவிக்க உதவுகிறது என மாயன்ஸால் நம்பப்படுகிறது

மாயன் மக்கள் இன்றும் வாழ்ந்து வந்தாலும், மாயன் கடைசி சுய ஆட்சி மாநிலம் 1697ல் ஸ்பானிய ஆட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மாயன் பேரரசு வீழ்ச்சியடைந்தது எப்படி என யாருக்கும் தெரியாது, ஸ்பானிஷ் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே பல நகரங்கள் அழிவின் விளிம்பில் இருந்துள்ளது.

வறட்சி, பஞ்சம், அதிக மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்களே மாயன் இன வீழ்ச்சிக்கு காரணம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

-http://news.lankasri.com