ஸ்பெயின் நாட்டில் 16 வயது சிறுமியை இணையத்தளம் மூலமாக விற்பனை செய்ய முயன்ற நபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் பாலியல் தொழில் செய்து வரும் ஒரு கும்பல் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘கற்புள்ள 16 வயது சிறுமி இருப்பதாகவும், இவரை 5,000 (RM23,741) யூரோவிற்கு வாங்கிக்கொள்ளலாம்’ என அறிவித்துள்ளனர்.
இணையத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விளம்பரம் தொடர்பான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட நகரத்திற்கு சென்று பாலியல் தொழில் நடத்தி வந்த அனைவரையும் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா பகுதியான அந்த நகரில் பாலியல் தொழில் பிரபலமாக நடைபெற்று வருவதும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
16 வயது சிறுமியை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://news.lankasri.com
அறம், நெறி, அன்பு , கருணை எல்லாம் செத்துவிட்டது.