சரவாக்கில் பணிபுரியும் வட கொரியரில் 50 பேர் அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். அவர்களின் விசாக்கள் காலாவதியானதே காரணம் எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான ஏற்பாட்டில் 170க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் சரவாக்கில் பணி புரிந்து வருகிறார்கள்.
“அவர்களின் விசாக்கள் காலாவதியாகி விட்டதால் அவர்கள் பியோங்காங்குக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் சரவாக்கில் காவலில் வைக்கப்படவில்லை. ஆவணங்கள் தயாரானதும் அவர்கள் அவர்களின் நாட்டுக்கு அனுப்பப்படுவர்”, என்று ஜாஹிட் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏன்டா கடைப்பிதழ் இல்லாமல் நிறைய பேர் சுற்றி திரியறான் அவனுங்கள ஒரு ம….. புடுங்கள