அகதிகளுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்

france_traces_001பிரான்சில் கடந்த அக்டோபர் மாதம் காலேவில் பெரிய அகதிகள் முகாம் மூடப்பட்டதை தொடர்ந்து தற்போது, மேலும் ஒரு அகதிகள் முகாமை மூடப்போவதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் Bruno Le Roux கூறியதாவது, Dunkirk- ல் துறைமுகம் அருகே வடக்கு கடற்கரையில் உள்ள பெரிய புலம்பெயர்ந்த Grande-Synthe முகாமை பாதுகாப்பு படையினர் விரைவில் அகற்ற தொடங்குவர்கள் என அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் காலே முகாம் மூடப்பட்டதை தொடர்ந்து Grande-Synthe முகாமில் அகதிகளின் எண்ணிக்கை 1400ல் இருந்து 1500 ஆக உயர்ந்துள்ளது.

குர்திஸ் மக்கள் அதிகம் உள்ள Grande-Synthe முகாமிலிருந்து பலர் பிரித்தானியா தப்பிச்செல்கின்றனர். பலர் கடத்தல்காரர்கள் உதவியை நாடி தப்பிச்செல்கின்றனர்.

Grande-Synthe முகாமில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த சண்டையில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

நவம்பர் மாதம் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார், இந்த பிரச்னைகளில் பொலிஸ் தலையிட்டது.

இதனால், விரைவில் அகதிகளை வெளியேற்றி Grande-Synthe முகாமை மூடும் பணியை பாதுகாப்பு படையினர் தொடங்குவர்கள் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

-http://news.lankasri.com