சிரியா நாட்டில் உள்ள மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 42 அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலெப்போ மாகாணத்தில் உள்ள al-Jineh என்ற நகரில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சிரியா அரசாங்கத்திற்கு எதிராக நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தை தடுக்க ரஷ்யாவுன் சிரியாவும் இணைந்து போரிட்டு வருகிறது.
இதே போல், சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் சிரியாவில் வான்வழி தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்நகரில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக மக்கள் கூடியுள்ளனர்.
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் போர் விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் மசூதி மீது வீசப்பட்டது.
இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த 42 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பலர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நிகந்த சம்பவமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே சமயம், இந்த தாக்குதலை தங்களது போர் விமானங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ராணுவ தளபதிகள் விளக்கம் அளித்துள்ளது.
சிரியா அதிபராக பஷார் அல்-அசாத் பதவியேற்ற 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை 3,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com