சோமாலியா நாட்டில் இருந்து புகலிடம் கோரி கடல் வழியாக புறப்பட்ட படகு மீது ஹெலிகொப்டர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அகதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிக்கும் மக்கள் அண்டை நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 150 அகதிகள் படகு ஒன்றில் செங்கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.
ஏமன் நாட்டிற்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் படகு வந்தபோது திடீரென ஒரு வானில் ஹெலிகொப்டர் பறந்துள்ளது.
பின்னர், படகு மீது ஹெலிகொப்டர் குண்டு மழை பெய்துள்ளது. படகில் இருந்த் அகதிகள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடியுள்ளனர்.

’நாங்கள் அகதிகள்…..எங்களை சுடாதீர்கள்’ என சிலர் விளக்குகளை கைகளில் ஏந்திக் காட்டியுள்ளனர். இதை பார்த்த ஹெலிகொப்டர் துப்பாக்கி சூட்டை நிறுத்தியுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவை சேர்ந்த கூட்டுப்படை இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
படகு கரைக்கு திரும்பியதும் அதில் ஒருவர் மீது ஒருவராக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்கள் கிடந்துள்ளது. இத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
நடுக்கடலில் அகதிகளின் படகு மீது நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com

























