பாதுகாப்பு விடயங்களுக்காக ஜேர்மனி எங்களுக்கு அதிக பணம் தர வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் இரு நாட்டு முக்கிய பிரச்சனைகள் குறித்தும், ராணுவ கூட்டணி அமைப்பான NATO குறித்தும் விவாதித்தனர்.
தற்போது இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜேர்மனி NATOவுக்கு அதிக பணம் தருகிறது.
NATO ஒரு வழக்கற்று போன அமைப்பு என அவர் சாடியுள்ளார். மேலும், ஜேர்மனிக்கு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் மிகவும் விலையுயர்ந்த, பாதுகாப்புகளை தருகிறது.
அதற்காக அவர்கள் எங்களுக்கு அதிகம் பணம் தர வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஏஞ்சலாவுடன் எனது சந்திப்பு அருமையாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com