அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டா? ஜேம்ஸ் கோமி பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனாட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவர்தற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்தரப்பினரான ஜனநாயகக் கட்சி, தொடர்ந்து இது பற்றி புகார் எழுப்பிவந்தது. இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான FBI-ன் இயக்குநர் ஜேம்ஸ் கோமி இது குறித்து கூறுகையில்,

2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைல் ரஷ்யா தலையீடு உள்ளதா என்பது பற்றி விசாரித்துவருவதாகவும், டிரம்ப் பிரச்சாரக் குழுவில் இருந்தவர்களுக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவந்த இந்த விஷயத்தில், FBI அமைப்பின் இயக்குநர் இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com