சிரியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கம் நாளுக்கு நாள் பலம் இழந்து வரும் நிலையில். அவர்கள் உலகில் எவரும் நினைத்துக் கூடப் பார்க்காத பல கொடுமைகளை அரங்கேற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் சிறுவன் ஒருவன் தனது கைகளை தூக்கிய வண்ணம். பயத்தோடு நடு நடுங்கிக்கொண்டு, ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் வந்துள்ளான்.
எனது இடுப்பில் வெடி குண்டு கட்டப்பட்டுள்ளது என்றும். அதனை களற்றவேண்டும் என்றும் கூறியுள்ளான். அவனுக்கு வெடி குண்டை கட்டி, ராணுவத்தின் பக்கம் சென்று அதனை வெடிக்க வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு பயந்த அச்சிறுவன் அதனை வெடிக்க வைக்க வில்லை.
பின்னர் சிரிய ராணுவத்தினர் அக்குண்டை மிகவும் கவனமாக செயலிழக்கச் செய்துள்ளார்கள்.
-http://www.athirvu.com




























