காலநிலை மாற்றத்தால் வறட்சியை எதிர்கொண்டுள்ள வடஆபிரிக்க நாடான சோமாலியாவில், உணவுகிடைக்காமல், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சோமாலியாவில் நிலவும் வறட்சி மட்டும் அந்நாட்டின் நீர்நிலைகள் வறண்டுள்ளமை மற்றும் குளங்கள் இண்மை போன்ற காரணங்களால் அந்நாட்டடின் விவசாயம் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கால்நடைகளும் உணவு, நீரின்றி இறந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் நாட்டில் இதுவரை சுமார் 6 மில்லியன் மக்களுக்கு நிறைவான உணவு கிடைக்கவில்லையெனவும், நிலவி வரும் உணுவுத்தட்டுப்பாடுகளை தீர்ப்பதற்கு, சர்வதேச நாடுகளின் உடனடியான உதவியை சோமாலியா கோரியுள்ளது. சோமாலியாவின் உணவுத்தட்டுபாடுகளை தீர்ப்பதற்கு, அந்நாட்டிற்கு சுமார் 825 மில்லியன் டொலர்கள் தேவையென அந்நாடு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.athirvu.com