பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த புகைப்படம் மூலம் லண்டன் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை போல அமைந்துள்ளது. அதாவது, லண்டன் பிக்-பென் கோபுரம் தாக்கப்படுவதை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை போன்று பிக்-பென் கோபுரம் தகர்க்கப்படுவதை போன்றும், இது ஆரம்பம் மட்டுமே, மிக விரைவில் லண்டன் நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டும் என எச்சரிப்பதை போன்றும் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் பாரிஸ், நீஸ் மற்றும் ஜேர்மன் தலைநகர் பெர்லின் போன்ற இடங்களில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் பலர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com