பெண்களுக்கு ஆதரவாக அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

kenya-flagகென்யா நாட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஆண் அரசியல் தலைவர்களுக்கு இணையாக பெண் அரசியல் தலைவர்களுக்கும் உரிமைக் கொடுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது.

கென்யா பாராளுமன்றத்தில் தற்போது 439 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 69 பேர் மட்டுமே பெண் எம்.பிக்கள்.

இந்த நிலை மாறி பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உரிமை வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அதில், ‘நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு 3 எம்.பிக்களில் ஒரு பெண் எம்.பி இருக்க வேண்டும்’ என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த புதிய சட்டத்தை 60 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் ஆட்சிக்கலைப்பிற்கு உத்தரவிட நேரிடும் என உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அந்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com