பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.
அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும் அதிகமான ஒளியை உமிழும் 147 பல்புகளை ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன் வெப்பத்தை கணக்கிட்டுள்ளனர்.
அது பூமியில் பகல் நேரத்தில் விழும் சூரியனின் ஒளியை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான உஷ்ணத்தை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது. மூவாயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை உமிழக்கூடிய செயற்கை சூரியனுக்கு ‘சின்லைட்’ என பெயரிட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் மூவாயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை உமிழக்கூடிய இந்த செயற்கை சூரியனின் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, கரியமில வாயு கலப்பில்லாத, புதிய ரக எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முன்முயற்சியாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆனால், செயற்கை சூரிய ஒளியை உருவாக்க தேவைப்படும் மின்சாரம் நான்குபேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com