உங்கள் கருத்து: போலீஸுக்கு வேறு வேலையே இல்லையா?

“மலேசியாவில் ஒரே ஒரு வகையான குற்றச்செயல்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது-அதாவது செக்ஸ் விவகாரம். அத்துடன் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே உள்ளார். அவர் அன்வார் இப்ராஹிம்.”

செக்ஸ் ஒளிநாடா: ‘தவறான தகவலைத் தந்ததற்காக அன்வார் மீது போலீஸ் விசாரணை

அர்ச்சன்: குற்றம் நிகழ்ந்துள்ளதோ இல்லையோ பிஎன் குறிப்பாக அம்னோ அளவுக்கு அதிகமான நடவடிக்கைகள் மூலம் மக்களை வெறுப்படையச் செய்து வருகிறது. ஒரு நபரை அடக்குவதற்கு அயறாமல் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளைக் கண்டு மக்கள் ஆத்திரமடைந்துள்ளது சாதாரண மனிதரைக் கேட்டால் கூட தெரிய வரும். ஆனால் அன்றாடம் பெரிய செய்தியாக வெளி வருகின்ற ஊழல்கள் விசாரிக்கப்படுவதே இல்லை.

கூடிய வரை அதிகம் பணத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரம் வரும் போது நாட்டை விட்டு ஒடத் தயாராக இருங்கள். மக்கள் போதும் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அடையாளம் இல்லாதவன்: நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நான் மலேசிய அரசியலிலிருந்து விலகியிருக்கிறேன். காரணம் மலேசியாவில் நிகழும் சம்பவங்களைக் கண்டு நான் வெறுப்படைந்துள்ளேன்.

ஆனால் இன்று நான் மலேசியாவுக்குத் திரும்பி மாற்றத்துக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளேன். அன்வார் இப்ராஹிம் போன்ற ஒர் எதிரியை ஒழித்துக் கட்டுவதற்கு இப்படி நேர்மையற்ற நடவடிக்கையில் அம்னோ இறங்குவது நியாயமாகாது. மாற்றம் தேவை என நான் இப்போது முழுமையாக நம்புகிறேன்.

அடையாளம் இல்லாதவன்_3f1f: மலேசியாவில் ஒரே ஒரு வகையான குற்றச்செயல்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது-அதாவது செக்ஸ் விவகாரம். அத்துடன் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே உள்ளார். அவர் அன்வார் இப்ராஹிம்.

அந்த செக்ஸ் வீடியோவில் இருப்பது 100 விழுக்காடு அன்வார் என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக தவறான புகாரைக் கொடுத்ததாக அவரை இப்போது விசாரிக்கின்றனர்.

இது என்ன நியாயம். ஏற்கனவே செக்ஸ் வீடியோ விவகாரம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது போலீஸ் ஒன்றும் செய்யவில்லை. காரணம் குற்றவாளி ஆளும் அரசைச் சார்ந்தவர்.

நம் நாட்டில் ஆட்சி நடக்கும் முறை இதுதான். அத்தகையவர்கள் நாட்டை ஆட்சி புரிந்தால் நமக்கு நிச்சயம் அஸ்தமனம்தான்.

அடையாளம் இல்லாதவன்_3e8f: முக்கியமான மனிதர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 15 வயது சிறுமியின் போலீஸ் புகார் நிச்சயம் இருக்க வேண்டும்.

(அல்தான்துயா ஷாரிபு-வின் குடிநுழைவு பதிவுகள் காணாமல் போகாமல் இருந்தால் தவிர) அதனை ஏன் மீண்டும் திறக்கக்கூடாது. அது இன்னும் ஆர்வத்தைத் தூண்டும். அல்லது போர்ட்டிக்சன் கல்வாத் விவகாரம்.

யூஸ்ரி: இந்த அபத்தத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். செக்ஸ் வீடியோவில் உள்ள பெண்ணை அன்வார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்தப் பெண் போலீசில்  புகார்  செய்தாரா?

பிஎன் -னுக்கு அன்வாரைத் தவிர வேறு விஷயங்களே இல்லையா? நான் அன்வார் ரசிகன் அல்ல. ஆனால் இது போன்ற மடத்தனமான கதைகளைக் கேட்டுக் கேட்டு எனக்கு வெறுப்பு வந்து விட்டது.

நம்மை பிஎன் -னை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்கு நெருக்கி வருகிறது. போலீஸுக்கு இதை விட வேறு நல்ல வேலையே இல்லையா?

பெர்ட் தான்: அன்வார் போலீசில் புகார் செய்யாமல் இருந்தால் உண்மையை எதிர்கொள்ள அன்வார் அஞ்சுவதாக அவரை முக்கிய ஊடகங்களும் அம்னோ அரசியல்வாதிகளும் சிறுமைப்படுத்தியிருப்பார்கள்.

அதனால் அன்வார் போலீஸ் தம்மை சந்தேகத்துக்குரிய நபரைப் போன்று வேட்டையாடும் எனத் தெரிந்திருந்தும் அவர் போலீசில் புகார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த வீடியோவில் இருந்தது அன்வார் என்பதை மெய்பிக்க போலீஸ் தவறி விட்டது. அத்துடன் ஆபாச வீடியோவை விநியோகம் செய்தததாக டத்தோ டி மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் அபராதமும் செலுத்தி விட்டனர். ஆகவே இப்போது ஏன் போலீஸ் தவறான தகவல் கொடுத்ததற்காக அன்வாரை விசாரிக்க வேண்டும்?

இது போலீஸின் அதிகார அத்துமீறல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. போலீஸின் தோற்றம் இன்னும் தாழ்ந்து விட்டது.

வீரா: அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யோசனைகள் அம்னோவிடம் முற்றாக  வற்றி விட்டன. அதனால் செக்ஸ் விவகாரங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. 1998ம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அதற்குச் சொல்லிக் கொடுத்த பாடம் அது தான். அம்னோ நாட்டை திவாலாக்குவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

TAGS: