வட கொரியா-அமெரிக்கா போர்: முற்றிலும் அழியப்போகும் நாடு எது?

northkorea_bomb_001வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

Leonid Petrov வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் வடகொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும்.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் குடும்பத்துடன், சீனா, ரஷ்யா அல்லது தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படும்.

அதே சமயம் போருக்கு பிறகு நாட்டைச் மறுசீரமைக்க சுமார் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். வடகொரியாவும், தென் கொரியாவும் மீண்டும் ஒரே நாடாக இணைந்து விடும்.

தென்கொரிய அரசு வடகொரிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தும். படிக்காத, முரட்டுத்தனமான ஏழை வடகொரிய மக்களை தென்கொரியா மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதே நேரம் தென்கொரியாவிற்கு மலிவு விலை தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனை வடகொரிய மக்கள் பூர்த்தி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

https://youtu.be/g5O2vBzjorI