2013 பொதுத் தேர்தலின்போது ஜோகூர் பாருவுக்கு வருகை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேளாங் பாத்தா வாக்காளர்கள் அத்தொகுதியில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
13வது பொதுத் தேர்தலின் நான்காம் ஆண்டுநிறைவான நேற்றும் அதே கேளாங் பாத்தாவுக்குச் சென்றார் மகாதிர். இப்போது அவருடைய பேச்சு முற்றிலும் மாறுபட்டிருந்தது.
டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற மகாதிருக்கு டிஏபி ஆதரவாளர்கள் அமோக வரவேற்பைக் கொடுத்தனர்.
விருந்தில் உரையாற்றிய மகாதிர் டிஏபியின் தேர்தல் நிதிக்கு தாராளமாக பணம் கொடுத்து உதவுமாறு கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார்.
ஒரு பொதுத் தேர்தல் முடிந்து இன்னொரு தேர்தல் வருவதற்குள் மிகப் பெரிய மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் பிரதமர் கூறினார். சிலரால் அம்மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“சீனர்கள் (சிலர்) கிட் சியாங் அவர்களை வஞ்சித்து விட்டதாக நினைக்கிறார்கள் மலாய்க்காரர்கள் (சிலர்) அவர்களை நான் வஞ்சித்து விட்டதாக நினைக்கிறார்கள். நாங்கள் யாரையும் வஞ்சிக்கவில்லை, எல்லாம் மலேசியர்களுக்காகத்தான் பாடுபடுகிறோம்”, என்றார் மகாதிர்.
தம் முன்னாள் கட்சியான அம்னோ, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில் களவாணி அரசாங்கமாக மாறி விட்டது என்றார்.
“அதற்காகத்தான் நானும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வும் பக்காத்தான் ஹராபான் கூட்டணியில் இணைந்தோம்.
“60 ஆண்டுகளாக எதிரணியால் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
“இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறோம். தேர்தலிலும் வெல்வோம்”, என்று கூறினார்.
கடந்த காலங்களில் டிஏபி-யை ஒரு பொல்லாத கட்சி என்றே தாம் கூறி வந்ததைக் குறிப்பிட்ட மகாதிர் அது ஏன் என்பதையும் விளக்கினார்.
“கடந்த காலத்தில் என்னுடைய அரசாங்கம் டிஏபி-யை இனவாதக் கட்சி என்றே முத்திரை குத்தி வந்தது.
“அதெல்லாம் அரசியல்- வெற்றி பெறுவதற்காக அப்படியெல்லாம் சொல்வோம்.
“பதிலுக்கு நான் ஒரு தீவிரவாதி என்று அவர்கள் முத்திரை குத்தினார்கள்”, என்று மகாதிர் சொன்னார்.
ஆனால், அதுவெல்லாம் உண்மை அல்ல, அதனால்தான் இப்போது டிஏபி-யுடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மகாதிமிறும் லிம் கிட சியாங்கும் எண்ணத்தைத்தான் தின்கிறார்களோ தெரியவில்லை
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ! நாளைக்கே முகிரீஸுக்கு துணை பிரதமர் என்றால் நஜிப் நல்லவர் ஆகி விடுவார் மகாதீர் ருக்கு ! “” melayu mudah lupa :”” ma ! மகாதீர் ஒரு படி மேல் , இந்தியா மெலாயு கான் !! பல்டி அடிப்பதிலும் ! திரித்து , மாட்ரி பேசுவதில் மகா தீரர் ! மலபார் மலையாளத்தான் ( காக்க ) ரத்தம் ஓடுது !!
அன்று எதிர்கட்சிகளை ஓரம் கட்டி உங்கள் களவாடி தலைவர்களுடன் ஆட்சி செய்தீர்கள். இன்று அதே எதிர் கட்சியுடன் இணைந்தது உங்கள் சுயநலம்.சீனர்கள் உங்களை ஏற்றுகொள்ளலாம். அனால் இந்தியர்கள் உங்களை ஏற்கப்போவது இல்லை.நீங்களும் சாமிவேலுவும் இந்தியர்களுக்கு செய்த அநியாயம் அட்டுழியம் இன்று மட்டும் அல்ல என்றும் மறக்க இயலாத ஒன்று..
seliyan
அரசியலில் நண்பன் பகைவன் ஆவதும், பகைவன் நண்பன் ஆவதும் சகஜமான ஒன்றுதான்.
காக்கா மகாதீரே, தான் ஊட்டி வளர்த்த மலாய்க்கார மக்களையே MELAYU MUDAH LUPA என தனது அனுபவத்தில் இப்பொழுதுதானே உணர தொடங்கியுள்ளார்.
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் என்பதுபோல் வளர்ந்த மரம் தனக்கு இடைஞ்சல் பண்ணுகிறபோது மரம் வளர்த்தவன் மரத்தை வெட்டாமலா விடுவான்.
விதை விதைத்தவன்தானே அறுவடை செய்ய வேண்டும். யாருடன் சேர்ந்து அறுவடை செய்தால் என்ன, நமக்கு தேவை அறுவடையின் வெற்றிதானே.