பிரித்தானியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் ஹரோவில் இருந்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவர் விளக்கம் அளிக்கையில், பிரித்தானியாவுக்கு வரும் அதிகூடிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பொதுச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனவும் பணியாளர்கள் குறை ஊதியம் பெறுவதற்கு அதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிரதமர் மேயின் கருத்து தொடர்பில் விமர்சனம் செய்துள்ள ஏனைய கட்சிகள் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் பிரித்தானியாவுக்கு வருகை தந்து பின்னர் பிரித்தானியாவிலிருந்து வெளியேறியது போக, எஞ்சியுள்ளோரின் எண்ணிக்கை சுமார் 273,000 என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com