பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யா! ஏன்?

russஇரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோல்வியை நினைவு கூறும் வகையில் ரஷ்யா ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலக போரில் ரஷ்யாவால் தோற்கடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு ஜனாதிபதி புடின் தலைமையில் ராணுவத்தினர் ஒன்று கூடினார்கள்.

பின்னர் 1000த்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் 112 சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி கொண்டு புடின் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தினார்கள்.

இதில் சமீபத்தில் தயாரான சக்திவாய்ந்த Tor-M2DT ரக ஏவுகணையும் அடங்கும்.

இந்த அணிவகுப்பில் 72 விமானங்களும் காட்சிக்காக கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலக போரில் உயிர் நீத்த 27 மில்லியன் சோவியத் படைவீரர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாகவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இது குறித்து கூறிய ரஷ்யாவின் விமானப்படை தளபதி Viktor Bondarev, எங்களின் இந்த ஆயுத அணிவகுப்பு மற்ற நாடுகளை பொறாமை அடைய செய்யும்.

இந்த அணிவகுப்பின் முக்கிய நோக்கமே எங்களிடம் உள்ள, தரம் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் பொருட்களை வெளியுலகுக்கு காட்டுவது தான் என கூறியுள்ளார்.

வட கொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் டிரம்பின் செயலை புடின் கண்டித்த சில நாட்களில் இந்த அணிவகுப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com