அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார்

north koreaAநிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன.

வட கொரியாவை சேர்ந்த ஒரு மூத்த ராஜிய அதிகாரி, நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது சாத்தியம் எனத் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், கிம் ஜோங் உன்னை சந்திப்பதை பெருமையாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

வட கொரியாவின் பேலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டம் குறித்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரியின் கருத்து வெளிவந்துள்ளது.

வட அமெரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரியான ச்வை சன்-ஹுய், வட கொரியா மற்றும் அமெரிக்க இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை பரிசீலிக்கப்படும் என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கலந்து கொள்ள வட கொரியா குறைந்த பட்சம் அதன் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்தோ அல்லது கைவிடுவது குறித்தோ விவாதிக்க வேண்டும் என்று பிபிசியின் கொரிய செய்தியாளர் ஸ்டீபன் ஈவன் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com