டீ-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடையணிந்து சாலையில் சென்ற கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கிருந்தவர்களுடன் சகஜமாக பேசும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கனடாவில் உள்ள Vancouver நகரில் உள்ள சாலையில் தனியார் பள்ளியை சேர்ந்த குழுவினர் போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டீ-சர்ட் மற்றும் ஷாட்ஸ் உடையணிந்து சகஜமாக ஜாக்கிங் சென்றுள்ளார்.
அவரை அடையாளம் கண்ட சிலர் அவரிடம் சென்று தங்கள் குரூப் போட்டோ ஷூட்டில் அவரும் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதை ஏற்று கொண்ட பிரதமர் அவர்களுடன் போட்டோவில் நின்றுள்ளார்.
இது குறித்து அங்கிருந்த பள்ளி மாணவர் Constantine Maragos கூறுகையில், நாங்கள் போட்டோ எடுத்து கொண்டிருந்த போது திடீரன பிரதமர் அந்த பக்கமாக வந்தார்.
முதலில், இங்கு பிரதமர் ஏன் வருகிறார் என ஆச்சரியமாக இருந்தது.
அதன்பின்னர் அவரும் எங்கள் போட்டோவில் நிற்க நாங்கள் அனுமதி கேட்டதற்கு அவர் உடனே ஒப்பு கொண்டார்.
இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என அவர் கூறியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமரின் போட்டோ கிராபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடம் ஒரு விளையாட்டு பூங்காவில் இருந்த ஒரு சிறுவனுடன் ஜஸ்டின் ட்ரூடோ சட்டையில்லாமல் சர்ப்ரைஸாக எடுத்து கொண்ட போட்டோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com