அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்தும் தங்கியிருக்கும் 700000 வெளிநாட்டவர்களால் நெருக்கடி

america_flagகடந்த நிதியாண்டில் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கிருந்தோர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விகா காலம் முடிவடைந்த பின்னர் அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்வர்கள், அமெரிக்காவில் தங்கியுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நுழைந்த 50 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்களில், 1.47 சதவீதம் அல்லது 739,478 பேர் தங்கள் விசா காலத்தை நீடித்து அங்கு தங்கியுள்ளனர்.

அனுமதிக்கக்கூடிய நேரத்திற்கு ஒரு நாள் அதிகமாக தங்கியிருப்பவர்களும் அதேபோல் அமெரிக்காவை விட்டு வெளியேற விரும்பும் மக்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையானது சீட்டல் பகுதி மக்களுக்கு நெருக்கடியாக உள்ளதென உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தினால் தங்களது குடிவரவு முறையின் ஒருமைப்பாடு ஆபத்தில் உள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக விசாவில் தற்காலிக தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தனிப்பட்ட பயணிகள் மற்றும் வணிக பயணங்களுக்காக அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும், அந்த எண்ணிக்கை அனைத்து மக்களிலும் 96 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-tamilwin.com