கர்பால்: நஜிப் ஆட்சியில் தொடர்வதற்கு ஜனவரியில் தேர்தல் நடத்துவார்

மக்களுக்காக அல்ல; தமது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக ஜனவரியில் தீடீர் தேர்தல் நடத்துவதைத் தவிர நஜிப்பிற்கு வேறு வழியில்லை என்று டிஎபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.

நஜிப்பை முடிப்பதற்கு கத்திகள் தயாராகி விட்டன. அதற்கான அறிகுறி அவரது கட்சிக்குள் இருப்பவர்களே அவரைக் குறைகூறி எழுதி வெளியிட்டிருக்கும் நூலாகும்.

“நஜிப்பின் தவறுகள்” என்ற அந்நூல் அவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுடன் 13 ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு அவர் “தன்னைத்தானே தியாகம் செய்து பதவி துறக்க வேண்டும்” என்றும் கூறுகிறது.

பிஎன் தலைவர்கள் அமனா என்ற அமைப்பைத் தோற்றுவித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய கர்பால், “தேர்தல் அருகில் வந்துவிட்டது என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை…அது ஜனவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”, என்று அவர் தமது புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற தொகுத்திக்கு வருகை புரிந்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

TAGS: