ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல்:80,000 மக்கள் உடனடியாக வெளியேற்றம்

ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இசைத் திருவிழாவான ராக் அம் ரிங் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான ROCK AM RING என்ற திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை Nuerburg பகுதியில் நடைபெற இருந்தது.

இத்திருவிழா வெள்ளிக்கிழமை மாலை துவங்கி, ஞாயிற்று கிழமை மாலை வரை என தொடர்ந்துமூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் கிட்டத்தட்ட 80,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை பொலிசார் திடீரென்று நிறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்கிருக்கும் மக்கள் அனைவரையும் பொலிசார் உடனடியாக வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து தெரிவிக்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே திருவிழா நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இத்திருவிழா நாளை சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தான் பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 22- பேர் பலியாகினர். இதனாலயே ஜேர்மனியில் குறித்த நிகழ்ச்சியில் பொலிசார் 1,200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இருந்த போதும் பாதுகாப்புக் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இத்திருவிழா தொடங்கி, ஞாயிறு மாலை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-lankasri.com