“தூதரகங்களும் தேர்தல் ஆணையமும் ‘குழப்பம் அடைந்துள்ளனவா’ அல்லது வேண்டுமென்றே தெரியாது போல் நாடாகமாடுகின்றனவா?”

“தேர்தல் ஆணையமும் தூதரகங்களும் நேற்றுதான் பிறந்தவை அல்ல. அத்தகைய விஷயங்களில் அவற்றுக்கு எப்படித் திடீரென அனுபவமில்லாமல் போனது?”

எனக்கு அஞ்சல் வாக்கு மறுக்கப்பட்டது என முன்னாள் வெளிநாட்டு மாணவர் ஒருவர் சாட்சியமளிக்கிறார்

பெண்டர்: மசீச அண்மையி தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கும் போது (வெளிநாடுகளில் வாழ்கின்ற மலேசியர்களுக்கு நாட்டின் நடப்பு விவகாரங்கள் தெரியாது என்பதால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்படக் கூடாது ) வாக்காளராவதற்கான தகுதி பற்றிக் குழப்பமோ அல்லது சீரான நடைமுறைகள் குறித்து தெளிவின்மையோ கிடையாது.

தேர்தலில் தாங்கள் தோல்வி காணக்கூடிய வாய்ப்புக்களை குறைக்கும் அம்னோ/பிஎன் உபாயங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழப்பம் எப்படி வர முடியும் ? தேர்தல் ஆணையமும் தூதரகங்களும் நேற்றுத் தான் பிறந்தவை அல்ல. அத்தகைய விஷயங்களில் அவற்றுக்கு எப்படித் திடீரென அனுபவமில்லாமல் போனது ? அத்தகைய காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. சிறுபிள்ளைத்தனமானது.

ஆகவே நாடாளுமன்றத் தேர்வுக் குழு அலுவல் அனைத்தும் விரயம் என்பதே என் கருத்தாகும்.

ஒங்: வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்களை அஞ்சல் வாக்காளார்களாக பதிவு செய்வதற்கான தகுதிகள் மீது தூதரக ஊழியர்களுக்கு இடையில் ‘குழப்பம்’ நிலவுவதாக தேர்தல் ஆணையத்தின் ஆய்வுப் பிரிவுத் துணைத் தலைவர் ஹருண் சே சு கூறியிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளின் இரண்டாவது பிரிவு, முழு நேர மாணவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது ஆனால் அது தனிப்பட்ட முறையில் கல்வி பயிலும் மாணவர்களா அல்லது அரசாங்க உதவியில் கல்வி கற்கும் மாணவர்களா என்பது தெளிவாக இல்லை என அவர் சொல்கிறார்.

அரசாங்கம் மனிதர்களை வேலைக்கு அமர்த்தாமல் தனது தூதரகங்களைத் தூதரகங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக தெரிகிறது. அதே வேளையில் அரசாங்கம் நமது தூதரகங்களில் ஆடு மாடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்பதை அரசாங்கத்திற்குச் சுட்டிக் காட்டத் தவறிய தேர்தல் ஆணையத்தில் கழுதைகளே வேலை செய்கின்றன எனக் கூறலாம்.

குரல்: எங்கே குழப்பம் ? தகுதி பெற்ற தரப்புக்கள் குறித்த முழுப் பட்டியல் தூதரகங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

அரசாங்க உதவியில் கற்கும் மாணவர்களும் முழு நேர மாணவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தேர்தல் விதிமுறை தெளிவாகக் கூறுகிறது. தூதரகங்களுக்கு உத்தரவிடப்படும் போது ஏன் முழு நேர மாணவர்கள் விடுபட்டனர் ?

அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்துக்கும் பிஎன் அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும் !!!

கேஜே ஜான்: ஷான் தான், நீங்கள் செய்தது மிக நல்ல காரியம். தவறுகளை சுட்டிக் காட்டவும் பேசவும் நமக்கு சரியான மேடைகள் தேவை. அரசாங்க ஊழியர்கள் விதிமுறைகள் பற்றி அறியாவிட்டாலும் சில சமயங்களில் விதிமுறைகளுக்குத் தாங்களே விளக்கம் கூறி அதற்கு பின்னால் மறைந்து கொள்கின்றனர்.

பெர்சே பேராளர்கள் திரிசங்கு நிலையில்

பூ: அரசாங்கத்தின் ஒர் அங்கமான நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவர் பெர்சே என்னும் வார்த்தை குறித்து ஏன் இவ்வளவு வெறுப்பைக் காட்டுகிறார் ? தேர்தல் நடைமுறையை சீர்திருத்துவது அந்தக் குழுவின் நோக்கம் இல்லையா ? அந்தச் சீர்திருத்தத்திற்கு பெர்சேயின் எட்டு கோரிக்கைகள் அடிப்படையாக இருக்கக் கூடாதா ?

மூண்டஒம்: மறுக்க முடியாத உண்மை இது தான்: ஆளும் கட்சியான பிஎன் மாற்றத்துக்குத் தயாராக இல்லை.

அவர்கள் என்றென்றும் மலேசியாவை ஆள விரும்புகின்றது. ஆனால் வரலாறு அதன் பக்கம் இல்லை.

கடந்த பல நூற்றாண்டுகளில் பல சாம்ராஜ்யங்கள், அரசாங்கங்கள், அமைப்புக்கள் வந்துள்ளன. போயுள்ளன. அது தனக்குப் பொருந்தாது என பிஎன் ஏன் எண்ணுகிறது ?

பிஎன் பேராளர்களுக்கு சிந்தனை வற்றி விட்டது. தங்கள் கருத்துக்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். அல்லது அகங்காரம் முற்றிப் போயுள்ளது. அவர்களில் எத்தனை பேர் வாயைத் திறப்பதற்கு முன்னர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் ? அவர்களுடைய பொறுப்பற்ற அறிக்கைகள், பொய்கள், காரணங்கள் ஆகியவற்றை நாம் எவ்வளவு காலத்திற்குத் தான் பொறுத்துக் கொள்வது ?

அரசாங்கம் மக்களுடைய பிரச்னைகளை கவனிக்கிறது என்னும் தோற்றத்தை உருவாக்குவதே அந்த விசாரணையின் நோக்கம். பரிந்துரைகள் ஏற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எனக்கு இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது. தனக்கு நன்மையாக இருந்தால் மட்டுமே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். தான் தோல்வி காணும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஒன்றும் செய்யாது

லிம் சொங் லியோங்: அந்தக் குழுத் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி, அங்கு அம்னோவுக்காக கண்ணை மூடிக் கொண்டு வேலை செய்கிறார். அவருடைய தலைமைத்துவத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை. அம்னோவே எல்லா முடிவுகளையும் செய்கிறது.

‘பெர்சே’ என்னும் சொல்லை அலட்சியம் செய்வதாலோ நீக்குவதாலோ அல்லது அதன் பேராளர்கள் வழங்கிய வாதத் தொகுப்புக்களின் மேலுறையை கிழிப்பதாலோ அது காணாமல் போய் விடாது.

பெர்சே என்ற வார்த்தையை கேட்பதற்குக் கூட அஞ்சிய மக்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையால பெர்சே உதயமானது.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு அழிக்க முடியாத மை மீது பெர்சேயுடன் ‘இணக்கம்’

குரல்: அம்பிகா சொன்னது முற்றிலும் உண்மை. அழிக்க முடியாத மையைப் பயன்படுத்த அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்த வேண்டியதில்லை.

தேர்தல் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏபி சுலைமான்: நாடாளுமன்றத் தேர்வுக் குழு விசாரணையில் இரண்டு பெரிய விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதை மறக்க வேண்டாம்

1) வாக்காளர் பட்டியல் முற்றாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்

2) அந்தச் சீர்திருத்தங்கள் அமலாக்கப்படாமல் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடாது

இல்லாவிட்டால் அந்தக் குழு நடத்தும் விசாரணை முழுவதும் கேலிக் கூத்தும் மோசடிகளும் நிறைந்த “நாடாகமாகி விடும்’.

TAGS: