தென்கொரியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக் காலமாக தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளது.
எனினும், இதனை பொருட்படுத்தாது மீண்டும் இன்று அடுத்தடுத்து ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் வான்சன் நகர் பகுதியில் இருந்து இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவை 200 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று கடலில் விழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணை தரையிலிருந்தவாறு கப்பலை தாக்கி அழிக்க கூடியது என நம்பப்படுகின்றது.
-tamilwin.com