புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்: சுவிஸ் அரசுக்கு கோரிக்கை

swissசுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை உடனே அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

அதே சமயம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.

எனினும், இந்நடவடிக்கையில் போதிய வேகம் இல்லாத காரணத்தினால் தற்போது சுவிஸ் அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

சுவிஸின் Liberal-Radical கட்சியை சேர்ந்த Damian Muller என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தான் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

’சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பவதில் அரசு அக்கறையாக செயல்படவில்லை. திருப்பி அனுப்பப்படும் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு தான் செல்கிறது.

மேலும், புகலிடம் மறுக்கப்பட்டவர்களில் சிலர் சுவிஸில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட நேரிடுகிறது.

குறிப்பாக, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது’ என எம்.பி தெரிவித்துள்ளார்.

எம்.பியின் கோரிக்கைக்கு சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Simonetta Sommaruga என்பவர் பதிலளித்துள்ளார்.

அதில் ‘ஒருவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டால் அவர் தீவிரவாதியாக தான் மாறுவார் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கை.

எனினும், இக்கோரிக்கையானது பாராளுமன்ற மேல் சபையில் விரைவில் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-lankasri.com