தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஜேர்மன் அரசின் அதிரடி திட்டம்

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு ஜேர்மன் அரசு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

ஜேர்மனியில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் பொருட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரின் விரல் அடையாளங்களையும் பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

மட்டுமின்றி சமூக ஊடகங்கள் அனைத்தின் குறுந்தகவல்களையும், தனிப்பட்ட தகவல் உள்ளிட்டவையும் சோதனை செய்யும் உரிமையை அதிகாரிகளுக்கு வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

இதனால் விரலடையாளம் பதிவு செய்யும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வயது வரம்பை 14 வயதில் இருந்து 6 வயதாக குறைத்துள்ளது.

யுத்தத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல நூறு பேர் அகதிகளாக ஜேர்மனிக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சட்ட திருத்தம் பயனளிக்கும் என உள்விவகார அமைச்சர் Joachim Herrmann தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த திட்டத்திற்கு எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாஜிக்களின் மன நிலையில் இருப்பதாலையே இதுபோன்ற சட்டத்திட்டங்களை முன்மொழிவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறுவர்களை பாதுகாப்பதை தவிர்த்து அவர்களை வேவு பார்ப்பது எந்த வகையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாடுகளில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அரசியல், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நலன்கருதி குறித்த நாடுகளில் அமுலில் இருக்கும் சட்டங்களை மாற்றியமைப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

-lankasri.com