ஐ.எஸ் இயக்கத் தலைவர் பாக்தாதி உயிரிழப்பு? ரஷ்யா தகவல்!

isis_leader_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி.

இவர் அண்மையில் ஈராக்கிலிருந்து வெளியேறி, சிரியாவின் மொசூல் நகரில் தலைமறைவானதாகக் கூறப்பட்டது.

இவர் உயிரிழந்து விட்டதாக, அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் ஐ.எஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

ஏற்கெனவே அவரது தலைக்கு 25 மில்லியன் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘மே மாத இறுதியில் சிரியாவின் ராக்கா நகரில், வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 தீவிரவாதக்குழுக்களின் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, ஐ.எஸ் தீவிரவாதத் தலைவர் பாக்தாதியும் உயிரிழந்துள்ளார்.

அவருடன் சேர்ந்து மேலும் சில ஐ.எஸ் தளபதிகளும் மரணமடைந்தனர் என்று கூறியுள்ளது.

ஆனால், பாக்தாதி குறித்து ஐ.எஸ் தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை

– Vikatan

ஐ.எஸ் தீவிரவாத தலைவர் பலி: ரஷ்யா பரபரப்பு தகவல்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான Abu Bakr al-Baghdadi என்பவர் ரஷ்ய வான்வழி தாக்குதலில் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அல்-பாக்தாதி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான யுத்தத்தில் உயிரிழந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

எனினும், இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்தமாதம் 28-ம் திகதி ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் அல்-பாக்தாதி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவில் தீவிரவாத குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் அல்-பாக்தாதி பங்கேற்றதாகவும், அக்கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியபோது 330 உட்பட அல்-பாக்தாதியும் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அல்-பாக்தாதியின் மரணம் பற்றி ஏற்கனவே புரளிகள் வெளியானதை தொடர்ந்து இந்த தகவலை விரிவாக விசாரணை செய்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-lankasri.com