ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழும் வடகொரியா ஜனாதிபதி

வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் ஒவ்வொரு நாளும் தான் கொல்லப்படுவோம் என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது.

தென் கொரியா பாராளுமன்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ‘அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு சிறப்பு படை ஒன்றை உருவாக்கியுள்ளது.

வடகொரியா ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கவும் அல்லது உயிரை பறிக்கவும் இப்படையில் இடம்பெற்றுள்ள உளவாளிகள் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

இத்தகவலை அறிந்துக்கொண்ட வடகொரியா ஜனாதிபதி ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்ந்து வருகிறார்.

மாலை நேரங்களில் வெளியே சென்றால், கடுமையான பாதுகாப்பு வளையத்திலும், அதிநவீன வாகனங்களில் மட்டுமே பயணம் செய்கிறார்.

வடகொரியாவிற்கு ஐ.நா சபை உள்ளிட்ட வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வட கொரியா பல பொருளாதார முன்னேற்றங்களை இழந்துள்ளது.

ஆனால், கொரிய தீபகற்பத்தில் அசாதாரண சூழல் அதிகரித்துள்ள நிலையில், தன் உயிர் மீதான அச்சமும் வடகொரியா ஜனாதிபதிக்கு அதிகரித்துள்ளது’ என தென் கொரியா பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்காவை நெருங்கும் வகையில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com