போலீஸ் காவலிலிருந்த கைதி தப்பியோடிய வழக்கில் விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் போலீசாரும் அவர்களின் தடுப்புக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
27க்கும் 59 வயதுக்குமிடைப்பட்ட அவ்வெண்மரும் வழக்கு தொடர்பான விசாரணை முடியும்வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு போலீஸ் தலைவர் சுவா கீ லை கூறினார்.
“56-வயது மீன்வரின் தடுப்புக்காவல் மேல்விசாரணைக்காக மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ்காரர்களைப் பொருத்தவரை அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்”, என்றவர் நேற்று தெரிவித்தார்.
ஒரே சொல் ; காரணம் : இலஞ்சம் இலஞ்சம் இலஞ்சம் , ‘போலே துதுப் ‘
boleh tutup .
நம் காவல் சூரர்கள். வேறு எப்படி?
அத்துடன் இதெல்லாம் கண் துடைப்பு– அவர்களை தற்காலிக வேலை நீப்புதான்.பாதி சம்பளத்தில் வைத்து 2 ஆண்டுகளுப்பின் அவர்கள் குற்றவாளி இல்லை என்று கூறி திருப்பி வேலை கொடுத்து பதவி உயர்வும் பெறுவார். இதுதான் நடக்கும். இதுதான் அன்றைக்கு இருந்து நடக்கிறது. எல்லாம் ஒரே குடும்பம் பிறகு எப்படி?