குற்றங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே பொது இடத்தில் பிரம்படி

pasசமுதாயத்துக்கு     அது    ஒரு   பாடமாக    அமைய    வேண்டும்   என்பதற்காகவே    கிளந்தானில்  பொதுமக்கள்  முன்னிலை   பிரம்படி  தண்டனை  கொடுக்கப்படுகிறது    என  பாஸ்  தகவல்   லைவர்   நஸ்ருடின்  ஹசான்   கூறினார்.

கிளந்தானில்   பாஸ்  அரசு,      ஷியாரியா   குற்றங்களுக்குப்  பொது இடத்தில்   பிரம்படி  கொடுக்க   ஷியாரியா   சட்டத்தில்    திருத்தத்தைக்   கொண்டு   வந்துள்ளது.

இஸ்லாத்தில்  சகோதரிகள்,   உரிமைக்குப்   போராடும்   வழக்குரைஞர்கள்   போன்ற  அமைப்புகள்   பொது  இடங்க்ளில்  பிரம்படி  கொடுப்பது  மனித   உரிமைகளுக்கும்   நவீன   விதிமுறைகளுக்கும்   ஏற்புடைதல்ல  என்று  குறைகூறியுள்ளன.

“மக்களுக்கு   பொதுஇடங்களில்  குற்றங்கள்    நிகழ்வது   பிரச்னையாக  இல்லை,   ஷியாரியா  முறைப்படி    பிரம்படி   கொடுப்பது   பிரச்னையாக   உள்ளது.  அதைக்   கண்டு  சுற்றுப்பயணிகளும்   முதலீட்டாளர்களும்   கிளந்தானைவிட்டு   ஓடி   விடுவார்களாம். இது  விசித்திரமான   சிந்தனையாக  உள்ளது.

“ஷியாரியா   குற்றம்   புரிவோருக்கு   இஸ்லாமிய  சட்டப்படி    பொதுஇடத்தில்   பிரம்படி  தண்டனை   கொடுப்பது    நியாயமானதே, குற்றத்திலிருந்து   விலகி  இரு   என்பதே   அது   தரும்  படிப்பிணையாகும்”,  என்று   நஸ்ருடின்   கூறினார்.