சந்தைப்பகுதிகள், நதிக்கரைகள் மட்டுமல்ல பாடசாலைகளிலும் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சிறப்பு அதிரடிப்படையினர் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரி போலவே ஆட்சி செய்து வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் செய்தி ஊடகங்களை வடகொரிய மக்கள் எவரேனும் பார்ப்பதை அதிகாரிகளுக்கு தெரிய வந்தால், அவர்களை மக்கள் கூடும் பொதுவெளியில் வரவழைத்து மரண தண்டனை அளிப்பதாக கூறப்படுகிறது.
குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்குவதற்காகவே சிறப்பு படை ஒன்றையும் ஆட்சியாளர் கிம் ஜோங் உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டாலும், ஏழ்மை காரணமாக சந்தையில் இருந்து அரிசி திருடினாலும் பொதுவெளியில் விசாரிக்கப்பட்டு உடனே துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்கப்படுகிறதாம்.
சமயங்களில், சில குற்றங்களுக்கு துப்பாக்கி குண்டுகளை வீணடிக்க வேண்டாம் என கருதி, சாகும் வரை அடித்து துன்புறுத்துவதும் உண்டாம்.
மட்டுமின்றி பாலியல் குற்றங்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு உடனையே அதை நிறைவேற்றுவதாகவும் கூறப்படுகிறது.
அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள், அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 375 பேர் தேசதுரோக பட்டியலில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இணைந்து ஒரு குழுவாக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சார்பில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த குழு வாயிலாக, மரண தண்டனை வழங்கப்படும் பகுதிகள் கைதிகளை புதைக்கும் பகுதிகள் என விரிவான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் மனித உரிமை மீறல்கள் எதுவும் வடகொரியாவில் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், இங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே கிம் ஜோங் அறிவித்து வருகிறார்.
-lankasri.com