டாக்டர் மகாதிர் முகம்மட், 1998இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பணிநீக்கம் செய்த முடிவை மீண்டும் தற்காத்துத்தான் பேசினார்.
“அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடந்துகொண்ட”தாக முன்னாள் பிரதமர் கூறினார்.
கடந்தகாலத்தைப் பற்றி மகாதிர் அதிகம் விவரிக்க விரும்பவில்லை.
“இப்போது நிலைமை மாறிவிட்டது. பழசையே கிளறிக் கொண்டிருந்தால் எல்லாரோடும் இணைந்து பணியாற்ற முடியாது.
“காலம் முழுவதும் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கத்தான் நேரும். அது நல்லதல்ல”, என முகநூலில் நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியொன்றில் மகாதிர் கூறினார்.
தாய்லாந்தின் நேஷன் பல்லூடகக் குழுமத் தலைவர் சுத்திஷாய் யூன் அன்வாரை நீக்கியது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு மகாதிர் அவ்வாறு பதிலளித்தார்.
அன்வர் அடுத்த பிரதமர் என்றால் உங்களுடன் சேர தயார்
வரலாற்றை புரட்டி பார்ப்போமானால் , தன் பதவிக்கு போட்டியாக வருபவர்களை வெட்டி வீழ்த்துவதும் , தலையை கொய்வதும் சதாரணமாக பார்க்கமுடியும் ! தன் பதவிக்கு போட்டியாக வந்த தன் மகனின் கண்களையே நோண்டி எடுத்த மொகலாய மன்னரும்
உண்டு !!! இன்றைய ஜனநாயக நாட்டில் அப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியாத காரணத்தினால்தான் , மகாதீர் மிக மிக கேவலமான முறையை பயன்படுத்தி அன்வர் இப்ராயிம் அவர்களை வீழ்த்தினார் !!! அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்பார்கள் அரசியல் உழலும் குள்ள நரிகள் !!! ஆனல் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் மறுபட்டிருப்பார்கள் !!!
எது எப்படி என்றாலும் மஹாதீர் தன் மதத்திற்காவும் இனத்திற்காவதும் தீவிர போராட்டம் குணம் உள்ளவர். இந்தியர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு