இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு முன்னர் பா.ஜ.க.வின் வாஜ்பாய் தலைமையமைச்சராக இருந்தபோதும் மகத்மா காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களை தனது உரையின் போது குறிப்பிடத் தவறியதில்லை.
இந்நிலையில் சுதந்திர நாள் உரையை நிகழ்த்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் இந்தியாவின் இரு பெரும் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்.
மேலும் இந்தியாவில் பிரச்சினைக்குள்ளான பகுதிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான கருத்துக்களையும் அவர் கூறத்தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கொடுமை சார் இது?