டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்

isis_001அமெரிக்க புதிய ஜனாதிபதி டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்தும், ஐ.எஸ் தீவிரவாத குழுவின் புதிய தாக்குதல் திட்டத்தை விளக்கும் வகையிலும் ஐ.எஸ் குழுவை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான்.

வீடியோவில் தோன்றிய தீவிரவாதி கூறியதாவது, இத்தாலி மற்றும் துருக்கியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும், பொதுமக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வைத்து படுகொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் விடுத்துள்ளான்.

இயந்திர துப்பாக்கிக்கு அருகில் நின்று பேசும் அவன் மேலும் கூறியதாவது, இந்த புதிய செய்தி டொனால்டு டிரம்ப்பிற்கு, நீங்கள் ரக்கா மற்றும் மொசூல் மீது இலக்கு கொண்டிருக்கலாம். ஆனால், நாங்கள் இஸ்தான்புல், ரோம்மை இலக்காக கொண்டிருப்போம்.

அல்லாஹ்வின் அனுமதியோடு நாங்கள், உங்களை உங்கள் சொந்த வீட்டில் வைத்து படுகொலை செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளான்.

குறித்த வீடியோ சிரியா நகரான ரக்காவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

-lankasri.com