சுரேந்திரன்: விசாரணைக் கைதிகளை லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதம்

arrestisaமலேசிய   ஊழல்தடுப்பு      ஆணையம் (எம்ஏசிசி)  விசாரணைக்காகத்   தடுத்து  வைக்கப்படுவோரைக்  கட்டாயப்படுத்தி   ஆரஞ்ச்  நிற  லாக்-அப்   சட்டை   அணியச்   செய்வது   சட்டவிரோதமாகும்   என்கிறார்   பாடாங்  செராய்   எம்பி  என். சுரேந்திரன்.

சுரேந்திரன்   முக்கிய   பிரமுகர்களான  பினாங்கு    ஆட்சிக்குழு   உறுப்பினர்   பீ  பூன்   போவும்  பெல்டா  முன்னாள்  தலைவர்  இசா  சமட்டும்  கைது   செய்யப்பட்டு   நீதிமன்றம்  கொண்டுவரப்பட்டதை  ஓர்    அறிக்கையில்   சுட்டிக்காட்டினார்.

“இருவரும்  எம்ஏசிசி-இன்  லாக்-அப்  சீருடை   அணிந்த  நிலையில்தான்   நீதிமன்றத்துக்கு   அழைத்து    வரப்பட்டனர்.

“இது   ஒரு  மனிதர்    குற்றவாளி   என  நிரூபிக்கப்படும்வரை    நிரபராதி   என்ற கோட்பாட்டை    மீறுகிறது,  எனவே  கூட்டரசு   அரசமைப்பு   சட்டப்பிரிவு  5-இன்படி   இது   ஒரு  சட்டவிரோதச்  செயலாகும்”,  என  சுரேந்திரன்   கூறினார்.

விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்படுவோர்   அவர்களின்   சொந்த   உடைகளை   அணிவதற்கு   அனுமதிக்கப்பட   வேண்டும்,  சட்ட  அமலாக்க   அதிகாரிகள்  கொடுக்கும்   ஆடைகளைத்தான்   அணிய   வேண்டும்   என்பதில்லை   என்றாரவர்.