ஸ்பெயின் நாட்டில் மக்கள் கூட்டத்தில் வான் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனாவில் உள்ள ரம்பிலாஸ் சுற்றுலாத்தலத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மீது மோதிய வான் ஓட்டுநர் சம்பவயிடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் உணவகத்தில் புகுந்து மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து அவசர சேவை சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், Plaça Catalunya சுற்றியுள்ள பகுதியில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து பீதியில் ஓடிய மக்கள் அருகில் உள்ள கடைகளில் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அவசர சேவைகள், உள்ளூர் மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களை மூட வேண்டும் தெரிவித்துள்ளனர்.
-tamilwin.com