பாவமெல்லாம் பார்க்கவேண்டாம்!! இருக்கும் அனைத்தையும் தயார் செய்யுங்கள்!!

kim-jong-unஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது.

பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இது என்றும் வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டது.

பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டும் என வடகொரிய இராணுவ விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சரி ஆரம்பமானது போர்: அடுத்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்படும் அமெரிக்கா அறிவிப்பு

north Korea Bவடகொரியா அடுத்த ஏவுகணையை ஏவி பரிசோதனை நடத்தினால். அதனை நடு வானில் வைத்து சுட்டு வீழ்த்த தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா முதன் முறையாக அறிவித்துள்ளது. வடகொரியாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்க கடல் படைக் கப்பலுக்கு, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் அமெரிக்க அதிபரின் நேரடி உத்தரவு கிடைத்தால் மாத்திரமே, கடல்படை கப்பல் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவ முடியும். இந்த அறிவிப்பானது சற்று முன்னர் வெளியாகி மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

ஆனால் இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் இருக்கிறார். அவர் தொடர்ந்தும் பல ஏவுகணைகளை பரிசோதிக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஏவுகணையை வட கொரியா ஏவினால் என்ன நடக்கும் ? 3ம் உலகப் போர் ஆரம்பிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-athirvu.com